தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு நாளை ( 20.5.25 ) நடைபெறும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா கடந்த 13ஆம் தேதி கால் நட்டு வைபவத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரணை நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு இன்று இரவு மாகாப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து நாளை ( மே 20 ) காலை கணபதி ஹோமம் கும்ப பூஜை, பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற உள்ளது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார தீபாரதனை கஞ்சி வார்த்தல் நடைபெறும்
பின்னர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39வது வட்ட செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் சுமார் 4000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி துவங்கி வைக்கிறார்.



