• vilasalnews@gmail.com

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் பள்ளிகள், அனைத்து சொத்துகளையும் அரசுடைமையாக்க வலியுறுத்தல்!

  • Share on

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட சபைகளும் 200க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்களும் உள்ளன. அது மட்டுமல்லாது பல கோடி மதிப்புகொண்ட வணிக வளாகங்கள், கட்டிடங்கள் என பல்லாயிரம் கோடிகள் மதிப்பு உள்ள சொத்துக்களை உள்ளடக்கியது தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம். இதனை நிர்வகிக்க கூடிய அந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு மோதல்களும், கோஷ்டி பூசல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


மேற்படி நிர்வாகம் நடத்தக்கூடிய கல்விக் கூடங்கள், காப்பகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு நிறுவனங்களில் பாதிரியார்களினாலோ அதனை நிர்வகிக்கக்கூடிய தனிநபர்களினாலோ பலவிதமான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் மோசடி புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.


உயர் நீதிமன்றம், ஒய்வு பெற்ற  நீதி அரசர் ஒருவரை நியமித்து, டயோசீசன் நிர்வாகத்தை கவனிக்க உத்தரவு அளித்தது. அதன்படி ஒய்வு பெற்ற நீதியரசர் ஜோதிமணி அவர்கள்  டயோசீசன் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இதன் மூலம், புகார்களில் சிக்கிய முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் மீதான நடவடிக்கையில் இறங்கிய நிலையில் நீதியரசரின்  காரை வழிமறித்து, சமூகத்தால் மதிக்ககூடிய, மாண்பிற்குரிய நீதியரசரை அருவருக்கத்தக்க வகையில் தகாத வார்த்தையில் பேசியும், அவர்களுடைய உதவியாளரை தாக்கியும் பெரும் அமலையில் ஈடுபட்ட மத போதகர்கள் மற்றும் உடன் இருந்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இச்செயலுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.


இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள், திருமடங்கள் அதற்குரிய சொத்துக்கள் என அனைத்தையும் நிர்வகிப்பதற்கு தனி அமைச்சகம் உள்ளது. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் அதனுடைய சொத்துக்களை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் அதற்குரிய சொத்துக்களை கவனிக்கவும், கட்டுப்படுத்தவும் எந்தவித அமைப்பும் ஏற்படுத்தாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.


ஆகவே தமிழக அரசு, ஒரு சாராரின் ஓட்டுக்காக பெயரளவில் மட்டும் நடவடிக்கைகளை எடுக்காமல் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம்,  கிறித்தவ வழிபாட்டுத்தலங்கள் அதற்குரிய சொத்துக்களையும் நிர்வகிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தனி வாரியம் அமைத்திட வேண்டும். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் அனைத்து சொத்துக்களையும் அரசுடைமை ஆக்கப்படவும் வேண்டுகிறோம். என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் தா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா : 5 ஆயிரம் பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கல்!

பாதுகாப்பற்ற ஏரல் பழைய பாலம்... பொதுமக்கள் திக் திக் பயணம்!

  • Share on