• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1500 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : ஒருவர் கைது!

  • Share on

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த சுமார் 1500 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 


தூத்துக்குடியில் முத்தையாபுரம் தனி பிரிவு காவலர் ஜான்சன், மத்திய பாகம் தனி பிரிவு காவலர் சாமுவேல் ஆகியோர் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து செல்லும் போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில், பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதற்க்கு எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. 


இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த தாளமுத்துநகர் சோட்டையன் தோப்பு அருகில் பூபாண்டியபுரம் 2வது தெரு ராஜா மகன் சடைய மாரியப்பன் (23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுமார் 1500 கிலோ பீடி இலைகளுடன் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் ஆசை வார்த்தைக்கு மயங்கிய முதியவர்... மயக்கிய 2 பேர் கைது!

மனம் மகிழ்கிறோம்... தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து நெகிழ்ந்த பொதுமக்கள்!

  • Share on