தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள சக்கிலிபட்டி மேல தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் அஜய் ( 23 ).
பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள வீட்டில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் அவர் மீது உரசியதாம். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அஜய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




