தூத்துக்குடி கடற்கரை மற்றும் பூங்காக்களில் பொதுமக்களுக்கு சுகச்சுழிப்பை ஏற்படுத்தும் வகையில் கண்ணிய குறைவான முறையில் ஆபாசமாக நடந்து வருவோர் மீதும், தெருக்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் காலை மாலை நடைபயிற்ச்சி மேற்கொள்வது, குழந்தைகளுடன் வந்து குடும்பத்தோடு பேசி விளையாடி மகிழ்ந்து பொழுதை போக்குவது என பொதுமக்களின் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்குமான தனிப்பங்களிப்பை கொடுத்து வருவது தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை , துறைமுக கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளும், ரோச் பூங்கா, ராஜாஜி பூங்கா, எம்ஜிஆர் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் தான்.
இங்கே தான் சில இளசுகள் முதல் பெரியவர்கள் வரை காதல், ரொமான்ஸ், சும்மா பேசிகிட்டு இருக்கோம் என்ற ரீதியில் பன்னும் அருவருக்கத்தக்க சில்மிஷ அட்ராசிட்டிகள் ரொம்பவும் எல்லை மீறி போவதாகவும், இதனால் கடற்கரை மற்றும் பூங்கா உள்ளிட்ட பொதுவான பொழுதுபோக்கு இடங்களில் பொதுமக்கள் குடும்பத்தோடு செல்ல முடியாத முகம் சுழிக்கும் வகையிலான நிலை ஏற்படுவதாகவும், ஆகவே, பொதுஇடங்களில் ஆபாச செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாய்கள் தொல்லை
தூத்துக்குடி மாநகர் முழுவதும் வெறிநாய், தெருநாய், வளர்ப்பு நாய் என நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தெருக்களில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என யாரும் தனியாக செல்ல முடியாத அச்சஉணர்வு நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதில், மனித நேய மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அகமது இக்பால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சுலைமான், மாவட்ட செயலாளர் ஊடகப் பிரிவு அப்சல், மனிதநேய மக்கள் கட்சி மாநகர தலைவர் அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநகர பொருளாளர் முகமது இப்ராஹிம், வர்த்தக அணி மாநகர செயலாளர் மெட்ரோ ஷேக், மனித உரிமை மற்றும் நுகர்வோர் அணி மாநகர செயலாளர் பகுருதீன் அலி, மனித நேய மக்கள் கட்சி மாநகர துணை செயலாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



