• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வீரநாயக்கன்தட்டு பகுதி சாலை பணிகள் விரைவில் தொடங்குகிறது - திமுக நிர்வாகி தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் இருந்து 3 கிலோ மீட்டரில் வீரநாயக்கன்தட்டு பகுதி உள்ளது.


இந்த பகுதியின் சாலையானது மழையால் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. இந்த நிலையில், ஆளும் அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் அரசியல் ஆதாயத்திற்கான இந்த சாலை விவகாரத்தில் செயல்படுகின்றனர். 


ஆனால், மேற்படி இந்த சாலையானது உப்பாற்று ஓடை வடக்குப்புரம் கரையில் அமைந்துள்ளதால் அந்த கரையை உயர்த்தி அதன் மேல் சாலை அமைப்பதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கரையில் ஒரிரு குடும்பங்கள் வசித்து வருவதாலும், கடந்த மாதம் பெய்த மழை, தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை உள்ளிட்ட சில காரணங்களால், புதிய சாலை பணிகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மண்டல தலைவர் பாலகுருசாமி, மகளிரணி நிர்வாகி எம்.முத்துலெட்சுமி ஆகியோரது ஏற்பாட்டில் இன்னும் சில நாட்களில் புதிய சாலை பணிகள் தொடங்க உள்ளது. பொதுமக்களின் அடிப்படை வசதி உள்ளிட அனைத்து விதமான தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என 51 வது வார்டு வீரநாயக்கன்தட்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் மிக்கேல் தெரிவித்துள்ளார்.

  • Share on

கூட்டாம்புளி இளைஞர் கொலை வழக்கு : 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

தூத்துக்குடியிருந்து இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை!

  • Share on