• vilasalnews@gmail.com

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை

  • Share on

கோவில்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், மந்தித்தோப்பு சாலை பாலாஜி நகரைச் சோ்ந்த சவுந்தர்ராஜன் (51). ஓய்வுபெற்ற ராணுவ வீரான இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் காவியா (19). இவர் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

நேற்று காலையில் வழக்கம்போல் காவியா கல்லூரிக்கு செல்வதற்கு தயாரானார். அப்போது அவர் திடீரென்று வீட்டில் அறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தொங்கினார். நீண்ட நேரமாகியும் காவியா கதவை திறக்காததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தனர்.

தூக்கில் தொங்கிய காவியாவை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காவியா இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவியா எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி இன்று துவக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்

  • Share on

அண்மை பதிவுகள்