தூத்துக்குடி மாவட்டத்தில் 24.12.2023 முதல் 31.12.2023 முடிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து மாவட்ட ஆட்சித்தலைவரும், பேரிடர் மேலாண்மைத் தலைவருமான லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய தினங்களில் பெய்த பெருமழை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளப்பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பகுதிகளில் பெருவாரியான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரப்பெறும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் இயல்பான வாழ்க்கை திரும்பிட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் 24.12.2023 முதல் 31.12.2023 முடிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து மாவட்ட ஆட்சித்தலைவரும், பேரிடர் மேலாண்மைத் தலைவருமான லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.