• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

குளத்தூரில் கிராமசபை கூட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

  • Share on

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, குளத்தூரில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவ.,1 ம் தேதியான இன்று குளத்தூர் அண்ணா நகர் காலனி பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உள்ளாட்சி தின கிராம சபை அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, கொரோனா பணி செய்தவர்கள், தூய்மை பணி  யாளர்களுக்கு பாராட்டு நற்சான்று வழங்கப்பட்டது.

மேலும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஆன்லைன் இனைப்பு,  வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், ஜல் ஜீவன் திட்டத்தில் பயன் பெரும் கிராமங்கள் அதன் இனைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் விளாத்திகுளம் ஒன்றிய  பணி மேற்பார்வையாளர் ஞான லதா, வார்டு உறுப்பினர்கள், கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி மாநகராட்சி 45வது வாா்டில் பகுதி சபை கூட்டம்

மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

  • Share on

அண்மை பதிவுகள்