• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு - முன்னாள் எம்எல்ஏ மோகன் நேரில் வாழ்த்து

  • Share on

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.மேலும், இந்த கூட்டத்தில் 4 மாதத்திற்குள் பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது. தேர்தல் நடத்துவதற்காக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ உடன் இருந்தார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பசுவந்தனை அருகே கோவில்களில் வெண்கல மணிகளை திருடியவர் கைது

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது - ரூ. 50,000 மதிப்பிலான இருசக்கர வாகனம் மீட்பு!

  • Share on

அண்மை பதிவுகள்