• vilasalnews@gmail.com

தமிழக தேர்தல் 2026 : எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமான கருத்துக் கணிப்புகள் - உற்சாகத்தில் அதிமுக!

  • Share on

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) அதிமுக முகாமில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என சில முன்னணி நிறுவனங்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டிய தீவிரப் பிரச்சாரமும், அதிமுகவின் உத்திகளும் பலன் அளித்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.


டைம்ஸ் நவ் (Times Now) கணிப்பு : அதிமுக கூட்டணி சுமார் 128 முதல் 147 தொகுதிகள் வரை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த கணிப்பு அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன.


ஆளுங்கட்சியான திமுகவிற்கு இந்தக் கருத்துக் கணிப்புகள் சவாலான முடிவுகளையே தந்துள்ளன. டைம்ஸ் நவ் கணிப்பின்படி திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்கள் வரை மட்டுமே பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 


அதேபோல், முதன்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  8 முதல் 15 இடங்கள் வரை பிடித்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.


தேர்தல் பிரச்சாரத்தின் போதே, "நிச்சயம் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்" என எடப்பாடி பழனிசாமி மிகுந்த நம்பிக்கையுடன் பேசி வந்தார். தற்போது வெளியாகியுள்ள இந்தக் கணிப்புகள் அவரது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கித் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.


இருப்பினும், இறுதி முடிவுகள் வரும் மே 4-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது உறுதியாகத் தெரியும்.

  • Share on

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் : கடந்த கால உண்மையும் கணிப்புகளும் - ஓர் அலசல்!

தமிழ்நாடு தேர்தல் ரிசல்ட்.. எப்படி இருந்தாலும்.. மிகப்பெரிய மாற்றம் வரப்போவது உறுதி - ஏன் தெரியுமா?

  • Share on