• vilasalnews@gmail.com

தமிழக தேர்தல் 2026: முதல் தேர்தலிலேயே அடித்து தூக்கும் விஜய்? - எக்சிட் போல் முடிவுகள் இதோ!

  • Share on

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான பிந்தைய வாக்குக்கணிப்புகள் (Exit Polls) தற்போது வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் தடை நீக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களின் கணிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் இந்த முறை வரலாறு காணாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சதவீத அடிப்படையில் அதிகமாகத் தெரிந்தாலும், வாக்காளர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது பெரிய அளவிலான 'வாக்குப்புரட்சி' எதுவும் நடைபெறவில்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.


ஆட்சியைத் தக்கவைக்கும் திமுக - பீப்பிள்ஸ் பல்ஸ் கணிப்பு

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை வெளியிட்டுள்ள 'People's Pulse' நிறுவனம், தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளது.


திமுக கூட்டணி: 125 முதல் 145 தொகுதிகள் 

அதிமுக கூட்டணி: 65 முதல் 80 தொகுதிகள்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக): 18 முதல் 24 தொகுதிகள்.


கடந்த 2021 தேர்தலை விட திமுக கூட்டணி மீண்டும் வலுவான இடத்தைப் பிடிக்கும் என்று இந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.


கவனத்தை ஈர்க்கும் விஜய்யின் தவெக

இந்தத் தேர்தலின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், முதல் தேர்தலிலேயே கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் விமர்சகர்கள் பலர் தவெக ஒரு இடத்தில் கூட வெல்லாது எனக் கூறி வந்த நிலையில், பீப்பிள்ஸ் பல்ஸ் மற்றும் சாணக்கியா ஸ்ட்ராட்டெஜிஸ் ஆகிய நிறுவனங்கள் தவெக 18 முதல் 24 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள் உண்மையான முடிவுகளுடன் ஒத்துப்போகுமா என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

  • Share on

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்... தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் : கடந்த கால உண்மையும் கணிப்புகளும் - ஓர் அலசல்!

  • Share on