• vilasalnews@gmail.com

வாக்களித்துவிட்டு மாற்றம் தேவையில்லை என சொன்னாரா அஜித்? உண்மை என்ன?

  • Share on

இன்று காலை தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு கிளம்பியபோது மாற்றம் தேவையில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அஜித் குமார் என தகவல் பரவியது. இந்நிலையில் அதில் உண்மை இல்லை என்கிறார் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா.


திருவான்மியூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6.45 மணிக்கு வந்த நடிகர் அஜித் குமார் 6.54 மணிக்கு வாக்களித்தார். தமிழகத்தில் பதிவான முதல் வாக்கு அஜித் குமாரின் வாக்கு என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. எப்பொழுதுமே திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களிக்கும் அஜித் குமார் இன்று தமிழகத்தின் முதல் வாக்கை பதிவு செய்தவராகியிருக்கிறார்.


அவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது அங்கு இருந்த செய்தியாளர்கள் அஜித்திடம் பேட்டி எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் தன் ரசிகர்களை பார்த்து ஹார்டின் விட்டுவிட்டு செல்போனில் வீடியோ எடுத்துவிட்டு சென்றார். இந்நிலையில் தமிழகத்தில் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு No Need அதாவது தேவையில்லை என்று அஜித் குமார் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.


குறிப்பிட்ட ஊடகம் ஒன்றின் லோகோவுடன் அந்த தகவல் ஷேர் செய்யப்படுவதால் அஜித் தான் அப்படி சொல்லிவிட்டாரோ என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் No Need என்று அஜித் குமார் கூறவே இல்லை என அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


அதாவது, செய்தியாளர் ஒருவர் அஜித்திடம் மைக்கை நீட்டி தமிழகத்தில் மாற்றம் தேவையா என கேட்டதாகவும் அதற்கு அஜித் பேட்டி வேண்டாம் என்பதைதான் தேவையில்லை என கூறியிருந்தார் என்றும் சுரேஷ் சந்திரா விளக்கியுள்ளார்.

  • Share on

சொந்த ஊரில் குடும்பத்துடன் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!

வாக்குப்பதிவு சதவீதம் மட்டும் வெற்றியை தீர்மானிக்காது – அரசியல் கணிப்புகளுக்கு ஜெகதீஷ்வர ரெட்டி எச்சரிக்கை!

  • Share on