• vilasalnews@gmail.com

சொந்த ஊரில் குடும்பத்துடன் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!

  • Share on

தமிழகம் முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.


அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். தனது மனைவி ராதா மற்றும் மகன் மிதுன் பழனிசாமி ஆகியோருடன் வீட்டிலிருந்து நடந்து வந்த அவர், வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.


எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவது இது 8-வது முறையாகும். தனது சொந்தத் தொகுதியிலேயே வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:


"பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டும். மக்கள் எதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்." என்றார்.

  • Share on

திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் உறுதி!

வாக்களித்துவிட்டு மாற்றம் தேவையில்லை என சொன்னாரா அஜித்? உண்மை என்ன?

  • Share on