தென்காசி  மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்தின் முன்பக்கம் நின்றவாறு பயணம் செய்த குடிபோதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர்  வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆலங்குளம் சென்றுஇருக்கிறார்.

பொருட்களை வாங்கி பையில் போட்டதுடன் அப்படியே மதுவையும் வாங்கி வயிற்றுக்குள் ஊற்றி இருக்கிறார்.

பின்னர்,எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறியவரை, கரும்புளியூத்தில் நிற்காது என்று கூறி நடத்துநர் இறக்கிவிட்டார்.

மது போதையில் ஆவேசமடைந்த காளிமுத்து, பேருந்தை நகர விடாமல் தகராறு செய்து முன்னால் நின்றவாறு ஆபாசமாக ஓட்டுனரை வசைபாடத் தொங்கினார்.

ஒரு கனத்தில் தொடர்ந்து பேருந்தின் முன்பக்கம் காளிமுத்து ஏறி நிற்கவே, அவரை பயமுறுத்துவதற்காக ஓட்டுநர் பேருந்தை சில அடி தூரம் இயக்கினார். அவர் பேருந்தை இயக்கியும் அவர் பயப்படாமல் பேருந்தில் நின்று கொண்டே இருந்துள்ளார்.

உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு அவரை கீழே இறக்கிவிட்டார். இச்சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.