எப்போதும் வென்றானில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.

தேனி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த டிரைவர் நாகராஜன் ( 42 ). இவரது வேனில் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 20 பேர் நேற்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை,  எப்போதும் வென்றான் அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறி வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் இரண்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து எப்போதும் வென்றான் போலீசார் விசாரித்து வருகின்றனர்