தூத்துக்குடி வரை இரு விரைவு ரயில்கள் நீட்டிக்க வேண்டும் - மாவட்ட பயணியர் நலச்சங்கம் கோரிக்கை!
நிருபர்
October 18, 2023
தூத்துக்குடி வரை இரு விரைவு ரயில்கள் நீட்டிக்க வேண்டும் - மாவட்ட பயணியர் நலச்சங்கம் கோரிக்கை!

தசரா பண்டிகையை ஒட்டி இரண்டு விரைவு ரயில்களை தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பயணியர் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் தெற்கு ரயில்வே பொது மேலாருக்கு அனுப்பியுள்ள மனுவில்:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா பண்டிகை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் வருவர். குறிப்பாக கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவர். எனவே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.

குறிப்பாக, திருநெல்வேலி - பாலக்காடு விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலையும் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.