<p><b>சாத்தான்குளம் அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில்&nbsp; இருவர் படுகாயம் அடைந்தனர்.</b><br></p><p>சாத்தான்குளம் அருகே உள்ள மேல புளியங்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர்&nbsp; வேலாயுத பெருமாள் ( 75.) தச்சு&nbsp; தொழிலாளியான&nbsp; இவர் புளியங்குளம் பஸ் நிறுத்தம் அருகில் சைக்கிளுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது செட்டிகுளம் பகுதியில் இருந்து&nbsp; பேய்குளம்&nbsp; நோக்கி&nbsp; பைக்கில் வந்த&nbsp; தெற்கு இளமால்குளம்&nbsp; அம்மன் கோயில் தெருவை&nbsp; சேர்ந்த ஆறுமுக பெருமாள் (வயது 50.) என்பவர் வேலாயுத பெருமாள்&nbsp; மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும்&nbsp; பலத்த&nbsp; காயம் அடைந்து&nbsp; &nbsp;சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று&nbsp; பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இதுகுறித்து&nbsp; வேலாயுத பெருமாள்&nbsp; சாத்தான்குளம் காவல் நிலையத்தில்&nbsp; அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர்&nbsp; ஏசு ராஜசேகரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.</p>