தூத்துக்குடி அருகே லாரி - இருசக்கரவாகனம் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!
நிருபர்
March 27, 2022
தூத்துக்குடி அருகே லாரி - இருசக்கரவாகனம் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!
<p><b>தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் நரேந்திரன் (வயது 35). இவர் ஸ்பிக்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். </b></p><p>இந்த நிலையில், நேற்று மாலை வேலைக்காக தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, முத்தையாபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவரை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராவிதமாக இவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. </p><p>இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையி. சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரேந்திரன் உயிரிழந்தார். </p><p>இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வராகின்றனர்.</p>