ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டியில் தடுப்பணை அமைக்கும் பணிகளை யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக அங்குள்ள புதுக்குளம் நிரம்பி குளத்தின் கரை முற்றிலுமாக உடைந்து சுற்றியுள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்து அதிகமான பாதிப்புகளை உண்டாக்கியது.

இதனையடுத்து குளத்தின் கரையை சீரமைத்து தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் முயற்சியின் பெயரில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுக்குளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அய்யாதுரை, அருண்குமார் மாடசாமி, துணைத் தலைவர் மகாலட்சுமி,

ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, மகளிரணி நித்யா, இளைஞரணி மகேஷ், சந்தனகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.