கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என இருக்காதீர்கள்… ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
நிருபர்
May 30, 2021
கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என இருக்காதீர்கள்… ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன்களுக்கான மாத தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிடிவி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் :

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாத தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களும் ‘கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது’ என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத்தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.