மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபரால் பரபரப்பு
நிருபர்
April 04, 2022
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபரால் பரபரப்பு
<p><b>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. </b></p><p>தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகிலுள்ள சவலாப்பேரியை அடுத்த ஆலந்தா கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முருகேசன் (40). இவர் சவலாப்பேரி பஸ் ஸ்டாப் அருகே ஆவின் பாலகம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லையாம். </p><p>இதனால் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் தான் மறைது வைத்து கொண்டுவந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். </p><p>இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p>