ஆறுமுகநேரி பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு!
நிருபர்
October 13, 2023
ஆறுமுகநேரி பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு!

ஆறுமுகநேரி பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

ஆறுமுகநேரி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததால், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, ஆறுமுகநேரி பகுதி மின்சார வாரிய பணியாளர்கள் உயர் அழுத்த மின் பாதையில் பழுதடைந்த மின்ஒயர்களை மாற்றி வருகின்றனர்.

மேலும், மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் பகுதிகளில் ஊடு மின்கம்பங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணி முடந்தவுடன் ஆறுமுகநேரி பகுதியில் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.