தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதாக கையும், களவுமாக பிடிபட்டவர்கள் தான் அதிகம். அதிலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை முதலிடத்தில் உள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் சில அதிகாரிகள், அலுவலர்களால் ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், போலீஸ், தீயணைப்பு என பாகுபாடின்றி லஞ்சம் ஊடுருவியுள்ளது.

நேற்று கூட தூத்துக்குடி அருகே வழிகாட்டி மதிப்பு அறிக்கைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ எட்டுராஜ் என்பவர் அவரது அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கூட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிளான் அப்ரூவலுக்கு அனுமதி தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் பற்குணன் கைது செய்யப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில் 2023 - 24ல் அதிகபட்சமாக 155 வழக்குகளை போலீசார் விசாரித்து வருகின்றனர். 2023 - 24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீது தான் அதிகபட்மாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மின்வாரியம் மீது 26 வழக்குகள், ஊரக வளர்ச்சித்துறை 22, உள்ளாட்சி அமைப்புகள்  21 வழக்குகள், சர்வே 18, போலீஸ் 10, பத்திரப்பதிவு  8, சமூகநலத்துறை  4, வணிகவரித்துறை, கூட்டுறவு , வேளாண் , கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை  2, தொழிலாளர் நலத்துறை  3 வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.