<p><b>ஆதனூர் கிராமத்தில் செல்வவிநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்கஈஸ்வரர் திருக்கோவிலில் 33 வது ஆண்டு மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமத்தில், வருகிற மார்ச் 8, 9ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள்,&nbsp; செல்வ விநாயகர், பால விநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்க ஈஸ்வரர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவன், காலபைரவர், ஜலதுர்க்கை, நவக்கிரகங்கள், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கோட்டையில் அமைந்துள்ள வேத நாராயணர்,&nbsp; உத்தண்டராய சுவாமி, ஜெகவீர மொட்டைய சாமி, இருளப்பசாமி, கருப்பசாமி, பத்திரகாளி, பேச்சியம்மன், மாரியம்மன், லாட சன்னிகர்,&nbsp; வைரவன் ஜெகவீர சக்கதேவிக்கும் மகாசிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.</p><p>இதனை முன்னிட்டு, ஆதனூர் கிராமத்தில் செல்வவிநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்கஈஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ஜெகவீர மொட்டைய சாமி ஆலயக்குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>