தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும்,   தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்  எச்சரிக்கப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 60000 கன அடி நீர் இன்று (13.12.2024)  வந்து கொண்டிருப்பதாலும்,  கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும்,  மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும்,   தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்  எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும், மாவட்டத்தின் மழை நீர் தேங்கியுள்ள இதர தாழ்வான  பகுதிகளில் வசிக்கும் மக்களும் தங்களுக்கு அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு வந்து பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள நீர்வரத்து மிகவும் உன்னிப்பாக அனைத்து நிலை அலுவலர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர்  இளம்பகவத் தெரிவித்துள்ளார்.