தூத்துக்குடி மாவட்ட மக்களே... உங்களுக்கு ரேஷன்கார்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா?
நிருபர்
October 13, 2023
தூத்துக்குடி மாவட்ட மக்களே... உங்களுக்கு ரேஷன்கார்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை ( 14.10.23) சனிக்கிழமை நடக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

இந்த முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு ரேஷன் கார்டுகளுக்கு உரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலும் இந்த முகாமில் பொதுவினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.