ஊழலை தட்டி கேட்டால் 'சங்கி' என்பதா? கோபமடைந்த கமல்ஹாசன்.!
நிருபர்
December 07, 2020
ஊழலை தட்டி கேட்டால் 'சங்கி' என்பதா? அனல் தெறிக்கும் கமல்ஹாசன்.!

கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பதிவில் "ஊழலை தட்டி கேட்டால் 'சங்கி' என்பதா என கேள்வியெழுப்பியுள்ளார்

இரண்டு தினங்கள் முன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா'விற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தின் திராவிட கட்சி கமல்ஹாசன் அவர்களை பா.ஜ.க'வின் 'பி டீம்' என்றும் அவரை 'சங்கி' எனவும் தனது சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதனால் கடும் கோபமடைந்த கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பதிவில் "ஊழலை தட்டி கேட்டால் 'சங்கி' என்பதா என்கிற ரீதியல் பதிவிட்டுள்ளார்.

"அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.

ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்."

என காட்டமாகவே பதிவிட்டுள்ளார்.