ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மாயகிருஷ்ணன் (20) என்பவருக்கும் குலசேகரநல்லூர் நடு தெருவைச் சேர்ந்த எட்டப்பன் மகன் முத்துமாரியப்பன் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக இன்று (20.03.2022) மாயகிருஷ்ணன் அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த முத்துமாரியப்பன் மற்றும் அவரது நண்பரான ஓசனுத்து பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வகுமார் (28) உட்பட 4 பேர் சேர்ந்து மாயகிருஷ்ணனிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து  மாயகிருஷ்ணனின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சித்ரகலா வழக்குப்பதிவு செய்து மேற்படி  செல்வகுமார் என்பவரை கைது அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் (TN67M9140 Splendor) பறிமுதல் செய்தார்.

மேலும் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.