<p><b>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 12ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.</b><br></p><p>இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-</p><p>2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 12.10.2023 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்&nbsp; முத்து&nbsp; அரங்கத்தில் வைத்து&nbsp; நடைபெற உள்ளது.&nbsp; எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.</p>