தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் வாள், கத்தி, வீச்சு அருவாள் உள்ளிட்ட 23 ஆயுதங்களை சட்டவிரோதாமாக தயாரித்து வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பதாக ஸ்ரீவைகுண்டம் காவல் துணை  கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் குரும்பூர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து,  ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஜீன்குமார், குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வளார் தாமஸ் தலைமையிலான தலைமைக் காவலர் செந்தில் ஆறுமுகம் மற்றும் காவலர்  காளிமுத்து ஆகியோர் அடங்கிய போலீசார் (23.11.2020) அன்று கொட்டார்விளை அங்கமங்கலம் பகுதியில் ரோந்து சென்று, அப்பகுதியைச் சேர்ந்த சப்பானிமுத்து மகன் நாராயணன் (68) என்பவரை விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவரது கொள்ளுப்பட்டரையில் வாள், கத்தி, அரிவாள், பாக்கெட் அரிவாள், சின்ன வீச்சு அருவாள், வீச்சருவாள் உள்ளிட்ட 23 ஆயுதங்களை சட்டவிரோதமாக தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்து, அவரிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.