மண்டையோடு கண்டெடுப்பு... தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணி என்ன?
நிருபர்
March 11, 2026
தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கருப்புப் பையில் மனித மண்டையோடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கருப்புப் பையில் மனித மண்டையோடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான மட்டக்கடை பார்த்தசாரதி தெருவில், இன்று காலை சாலையோர மின் கம்பம் அருகே கேட்பாரற்று ஒரு கருப்புப் பை கிடந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் என எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்தப் பகுதியில், அந்த மர்மப் பையைக் கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், அந்தப் பையைத் திறந்து சோதனை செய்தனர். அப்போது பையினுள் மனித மண்டையோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தூத்துக்குடி மாநகரக் துணை காவல் கண்காணிப்பாளர் சுனில், தடயங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர், அந்த மண்டையோடு ஆம்புலன்ஸ் மூலம் ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பான நகரின் மையப்பகுதியில் மண்டையோடு கண்டெடுக்கப்பட்ட இந்தச் சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே அச்சத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.