சாத்தான்குளம் விவகாரத்தில் காவலர்கள் முருகன்,  வெயிலுமுத்து,  தாமஸ் பிரான்சிஸ் மற்றும் முத்துராஜ் ஆகியோரின் ஜாமின் மனு மீதான விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.

தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ்,  மகன் பெனிக்ஸ் ஆகியோர் இறந்த வழக்கில்,  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காவலர்கள் முருகன்,  வெயில் முத்து,  தாமஸ் பிரான்சிஸ்,  முத்துராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தங்கள் மனுவில்,  " சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்,  மகன் பெனிக்ஸ் ஆகியோர் இறந்த வழக்கில் கைதாகி இப்போது மதுரை மத்திய சிறையில் உள்ளோம். ஐகோர்ட் கிளை உத்தரவு படி சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இப்போது சிபிஐ அதிகாரிகள் வழக்கை விசாரிக் கின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல்துறை,  சிபிஐ அதிகாரிகள் சேகரித்து விட்டனர். விசாரணையும் முடிந்துள்ளது. எங்களுக்கு ஜாமின் வழங்கினால் தலைமறைவாக மாட்டோம், நீதிமன்ற விதிகளுக்கு கட்டுப்படுவோம்"  என்று கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக கால அவகாசம் கோரினார். இதனால் விசாரணை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.