• vilasalnews@gmail.com

நெட்டிசன்களின் விமர்சன கோடாரி கூர்மையில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!

  • Share on

இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்து பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.


அதே வேளையில், மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும்.அதற்காக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விஜய் வந்தார். தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் எனக் கூறி 10 நிமிடம் 20 நிமிடம் அல்ல, 3 மணி நேரம் உட்கார்ந்திருந்து சந்தித்தார்.


சாத்தியமே இல்லாத நேரத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்து பிரச்சனையை கூறினார். விஜய் நேரில் வந்து கேட்கிறார் என்பதற்காக அவருக்கு உதவ வேண்டும் எனக் கூறியவர் எடப்பாடி பழனிசாமி


அதற்காக உடனுக்குடன் டெல்லிக்கு பேசி அதிகாரிகளை நேரில் வரவழைத்து, மெர்சல் பட பிரச்சனைக்கு இரவோடு இரவாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்பட்டது. இதனால், திட்டமிட்ட தேதியில் மெர்சல் ரிலீஸானது என்று கடந்த காலங்களில் விஜய்யை விமர்சித்து கடம்பூர் ராஜூ பேசியிருந்தார்.


அன்று மெர்சல் பட விவகாரத்தில் விஜய் 3 மணி நேரம் உட்கார்ந்திருந்து அப்போதைய முதல்வர் எடப்பாடியை சந்தித்தார் என்று மார்தட்டிக்கொண்ட, கடம்பூர் ராஜூ தான், இன்று விஜய்யின் தவெக கட்சியில் இணைய பனையூர் தவெக தலைமை அலுவலக வாசலில் மணி கணக்கில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


காலம் தான் எவ்வளவு விசித்திரமானது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் புளந்து கட்டி வருகின்றனர் விமர்சன கோடாரிகளால்.

  • Share on

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஜமாபந்தி : உடனடி பட்டா வழங்கல்!

முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன் தலைமையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அதிமுக நிர்வாகிகள்!

  • Share on