24 மணி நேரமும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக
கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1800-599-1960
வாட்ஸ்அப் (whatsapp) செயலி எண் - 94864 54714
கைப்பேசி செயலி – C-Vigil
ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.