விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராம பள்ளி மாணவி படுகொலைக்கு நீதி வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராம பள்ளி மாணவி படுகொலைக்கு நீதி வேண்டியும், 4 நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்ய படவில்லை எனவும், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் குளத்தூர் பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி 5 நிமிடம் பள்ளி மாணவியின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக, விளாத்திகுளம் தொகுதி நாதக வேட்பாளர் பாலாஜி, கோவில்பட்டி வேட்பாளர் பாண்டி, ஓட்டப்பிட்டாராம் வேட்பாளர் அனுசுயா, தூத்துக்குடி வேட்பாளர் ஜேக்கப், திருச்செந்தூர் வேட்பாளர் ஒபீலியா, ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

