ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தருவைகுளம் கிராம மீனவ மக்களின் நீண்ட கால கோரிக்கையான மீன்பிடி துறைமுகம் - தூண்டில் வளைவு பாலம் அமைத்து தர வேண்டுமென ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையாவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இது தொடர்பாக எம்எல்ஏ சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து தொடர் முயற்சியின் பலனாக கடந்த 04-03-2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம்- தூண்டில் வளைவு பாலம் அமைக்க காணொளி காட்சி வாயிலாக பணிகள் தொடங்கப்பட்டது.
இதனையடுத்து, தருவைகுளம் மீனவ மக்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்து பெரும் முயற்சி மேற்கொண்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாவிற்கு தருவைகுளம் மீனவ சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட நேரில் வந்து நன்றி தெரிவித்தனர்.
இதில், தருவைகுளம் பங்குத்தந்தை வின்சென்ட், ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், கிளைச் செயலாளர் பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




