• vilasalnews@gmail.com

பூட்டியே கிடக்கிறது ... பூதாகரமான விவகாரம்: தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவல நிலை!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பிரதான வாசல் ஒன்றே 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.


மருத்துவமனையின் முக்கிய வாசல் VVD சிக்னல் அருகே அமைந்துள்ளது. இந்த வாசல் மட்டுமே இரவு பகல் என இடையறாது திறந்து வைக்கப்பட்டு வருவதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் அந்தப் பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகளின் வருகை, செல்லும் பணிகள் தடைபடுவதாக கூறப்படுகிறது.


இதனுடன், திருச்செந்தூர் பிரதான சாலையில் ஒரு வாசலும், சுப்பையா முதலியார்புரம் தெருவில் ஒரு வாசலும் உள்ள நிலையில், அவை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. குறிப்பாக, சுப்பையா முதலியார்புரம் பகுதியில் உள்ள வாசல் ஆம்புலன்ஸ் செல்லும் நேரங்களில் மட்டும் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.




இதனால் மருத்துவமனையின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. எனவே, மருத்துவமனையில் உள்ள மூன்று வாசல்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.


அதேபோல், குறைந்தபட்சமாக காலை 6 மணி முதல் இரவு  9 மணி வரை அனைத்து வாசல்களையும் திறந்து வைத்தால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும், மகப்பேறு பிரிவில் உள்ள லிப்ட் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அரசு மருத்துவமனை முழுவதும் தரமான குடிநீர் வசதி மற்றும் மின் விளக்கு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வில் இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார்  ஏற்பாட்டின் பேரில் கோரிக்கை மனுவினை அளித்தனர். மேலும் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் முத்து பெரியநாயகம் மகளிர் அணி மாவட்ட தலைவர்  வெள்ளத்தாய் அன்னராஜ் மாவட்ட நிர்வாகிகள் முகேஷ்,  குலசை ரமேஷ் ,  பொன் விக்னேஷ்,  மண்டல் நிர்வாகிகள்  விக்னேஷ், சுந்தர்,  கார்த்திக்,  கல்யாணசுந்தரம், ராஜேஷ், மாரிஸ் குமார் மேலும் சமூக ஆர்வலர்  பாலதண்டாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  • Share on

வேலை தேடி அலைய வேண்டாம்.. வேலை உங்களைத் தேடி வருகிறது! தூத்துக்குடிக்கு வாங்க!

அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்!

  • Share on