• vilasalnews@gmail.com

அயிரவன்பட்டி கிராமத்திற்கு புதிய ரேஷன் கடை... எம்.எல்.ஏ சண்முகையா திறந்து வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இளவேலங்கால் ஊராட்சி, அயிரவன்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டது.


இந்த புதிய ரேஷன் கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா  இன்று முறைப்படி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.


இந்தத் திறப்பு விழாவில் முன்னாள் யூனியன் சேர்மன்  ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், உதவி பொறியாளர் செந்தில், வட்டார வழங்கல் அலுவலர் வனஜா, கூட்டுறவு சங்க செயலாளர் அரிராம், மேலும், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர்  மணிகண்டன், இளைஞரணி நிர்வாகிகள்  சரவணகுமார், மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


  • Share on

கல்லத்திகிணறு கிராமத்தில் புதிய சமையலறை மற்றும் உணவுக்கூடம் திறப்பு: எம்.எல்.ஏ சண்முகையா பங்கேற்பு

வேலை தேடி அலைய வேண்டாம்.. வேலை உங்களைத் தேடி வருகிறது! தூத்துக்குடிக்கு வாங்க!

  • Share on