• vilasalnews@gmail.com

சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரிடமும் வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!

  • Share on

வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு தனிமனிதர் அல்ல; அவர் அடக்குமுறைக்கு எதிரான ஒரு தத்துவத்தின் அடையாளம்.


தன்னைச் சுற்றி இருந்த பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு அடிபணிந்த போதும், 'மானம் பெரிது' என வாழ்ந்து காட்டியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் முன்னெடுத்தது வெறும் நிலத்திற்கான போர் மட்டுமல்ல, ஒரு இனத்தின் சுயமரியாதைக்கான போர் என்பதை உலகுக்கு உணர்த்தியது அவரின் உரிமை குரல். கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட போது, அந்த மண்ணில் வீழ்ந்தது ஒரு உடல் அல்ல; அது பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களை உருவாக்கிய ஒரு விதை.


சில வரலாற்றுப் பதிவுகள் மாவீரர்களைச் சிதைக்க முயற்சிக்கலாம். ஆனால், மக்களின் இதயங்களில் வாழும் நாயகர்களை எந்த வணிக நோக்கம் கொண்ட எழுத்துக்களாலும் அழித்துவிட முடியாது. லட்சியத்திற்காக வாழ்பவர்கள் என்றும் மக்களால் கொண்டாடப்படுவார்கள் என்பதற்கு இன்றும் கொண்டாடப்படுகிற வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-வது பிறந்தநாள் கொண்டாட்டமே சாட்சி.


"வீரம் என்பது பயமில்லாமல் இருப்பது அல்ல, பயத்தை எதிர்த்து நிற்பது." அந்த வகையில், சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரிடமும் வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.


மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் ஓங்குக!

  • Share on

தூத்துக்குடியில் ஒரு ஆண்டில் மட்டும் சாதி ரீதியான படுகொலைகள்... காவல்துறை கொடுத்த ரிப்போர்ட்!

தூத்துக்குடியில் லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு : 3 இளைஞர்கள் கைது

  • Share on