• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.  


தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 2 குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆதிலிங்கம். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராஜகார்த்திக் (23), பிஏ பட்டதாரியான இவர் கடந்த 24 ஆம் தேதி இரவு நடந்த கிறிஸ்மஸ் கேரல் ஊர்வலத்தை பாரத்துவிட்டு, தனது நண்பரான சுப்பையா புரத்தை சேர்ந்த கிரி என்பருடன் நள்ளிரவு அவரது வீட்டில் தங்கினாராம்.


அப்போது வீட்டு மொட்டை மாடி சுவரில் அமர்ந்திருந்த ராஜகார்த்திக் நிலை தருமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

விளாத்திகுளம் தொகுதிக்கு விருப்ப மனு அளித்த வழக்கறிஞர் அணி நிர்வாகி.. கவனம் பெறும் கரிசல் பூமி!

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வேண்டுகோள்!

  • Share on