தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான பள்ளி குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை நேரில் சென்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நலம் விசாரித்தார்.
தூத்துக்குடி அருகே மாப்பிளையூரணி ஊராட்சி ஜாஹிர் உசேன் நகரில் இருந்து தூத்துக்குடி உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ இன்று (டிச.,15 ) விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, பள்ளி குழந்தைகள் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, தகவலறிந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த குழந்தைகளை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது, உறைவிட மருத்துவர் சைலஸ், திமுக மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அந்தோனி தனுஸ்பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிலோமின்ராஜ், வட்ட செயலாளர் கார்த்திக், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர் ஜேசுராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




