• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

  • Share on

சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


குருவாயூர் - சென்னை விரைவு ரெயில் (வண்டி எண்: 16127-16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது. இந்த ரயில் கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில், இருமார்க்கங்களிலும் நிற்காமல் சென்று வந்தது. இந்த ரயில் வருகிற 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


அந்த அறிவிப்பில், "தினமும் சென்னையில் இருந்து வரும் இந்த ரயில் (16127) இரவு 7.53 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். அங்கிருந்து கடம்பூருக்கு இரவு 8.07 மணிக்கு சென்று, இரவு 8.08 மணிக்கு புறப்படும். அங்கிருந்து புறப்பட்டு செல்லும் ரயில் இரவு 8.18 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு சென்று, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.


அதே போல், மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் (16128) தினமும் காலை 9.28 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அங்கிருந்து 9.39 மணிக்கு கடம்பூர் சென்று, காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.56 மணிக்கு கோவில்பட்டி சென்றடையும். அங்கிருந்து காலை 9.58 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் குருவாயூர் விரைவு ரயில் நிற்கும் என்ற அறிவிப்புக்கு சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  • Share on

திருச்செந்தூர் கடற்கரையோரம் குவிந்த பல லட்சம் பக்தர்கள்.... விண்ணைப் பிளந்த முழக்கம்!

தூத்துக்குடியில் நேர்மையான இளைஞர்கள் 2 பேருக்கு பொதுமக்கள் பாராட்டு!

  • Share on