• vilasalnews@gmail.com

தங்கம் பதக்கம் வென்ற இளைஞருக்கு தவெக எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் பாராட்டு!

  • Share on

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த சண்முகராஜா தங்கம் பதக்கம் வென்றுள்ளதையடுத்து, அவருக்கு தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் தலைமையில் தவெகவினர் நேரில் சென்று  கேடயத்துடன் ஊக்கத்தொகை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கௌரவித்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி மகன் சண்முகராஜா (27). இவர், கடந்த ஜூலை 26 ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான ஸ்ட்ரென்த் லிப்டிங் போட்டியில் (பளு தூக்கும் போட்டி) இந்தியா சார்பில் 76 கிலோ சீனியர் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


இப்போட்டியில் 250 கிலோ எடை பிரிவில் சண்முகராஜா, 270 கிலோ பளு தூக்கி கஜகஸ்தான் போட்டியாளர் (250 கிலோ) உலக சாதனையை முறியடித்துள்ளார். இந்நிலையில்,  தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் தலைமையில் தவெகவினர் நேரில் சென்று அவரை ஊக்குவிக்கும் விதமாக கேடயத்துடன் ஊக்கத்தொகை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கௌரவித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் இரண்டு பேர் கொலை செய்து புதைப்பு... மாவட்ட காவல்துறை விளக்கம்!

கடலில் மூழ்கிய படகு... உதவி கரம் நீட்டிய அஜிதா ஆக்னல் தலைமையிலான தவெகவினர்!

  • Share on