• vilasalnews@gmail.com

எட்டயபுரத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

  • Share on

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற இருக்கும் 2வது மாநில மாநாடு தொடர்பாக, எட்டயபுரம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டயபுரம் பேரூராட்சி தவெக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.


கூட்டத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி விளாத்திகுளம் பிரவீன்குமார் தலைமை தாங்கி பேசுகையில்:- 


தவெக இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரை மாநகரில் மிகப் பிரம்மாண்டமாக சிறப்பாக நடைபெற உள்ளது. தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் அனைத்து  மாவட்டங்களில் நடத்தப்படும். தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வராக 2026 ல் அமர்வது நிச்சயம்.


இதுவரை இல்லாத அளவுக்கு மாநாட்டில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு தொடக்கமாக இந்த மாநாடு அமையும். நமது கழகத்தின் 2 வது மாநாடு வெற்றியடைய அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி, கட்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

  • Share on

இந்த ரூட்டில் போங்க... தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு!

தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகை... வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள்!

  • Share on