• vilasalnews@gmail.com

தெய்வசெயல்புரம் ஆலமர சுடலை மாடசுவாமி கோவில் வருஷாபிஷேக விழா : அன்னதானத்துடன் இன்று நடக்கிறது!

  • Share on

தெய்வசெயல்புரம் ஆலமரம் சுடலை மாடசுவாமி கோவில் வருஷாபிஷேக விழா அன்னதானத்துடன் இன்று நடக்கிறது.


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட தெய்வ செயல்புரம் திருவேங்கிடபுரத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆன்மீக சிறப்பு பெற்ற ஆலமரம் சீவலப்பேரி சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகள் திருக்கோவில் அமைந்துள்ளது.


இக்கோவில் வருஷாபிஷேக விழா இன்று ( வெள்ளிக்கிழமை ) சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமாக நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் மதியம் 12 மணி வரை யாகசாலை பூஜை, கும்ப பூஜை, வேதபாராயண ஜெபம், ருத்ரஹோமம், தீபாராதனை மற்றும் அபஷேக பூஜைகள் நடக்கிறது.


அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 12.30க்குள் சீவலப்பேரி சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகமும் நடக்கிறது. மதியம் 1.00 மணிக்கு பக்தர்களுக்கு மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக துணை தலைவருமான வழக்கறிஞர் செந்தில்குமார் பிரபு, விஏஓ ரமேஷ் குடும்பத்தினர் அன்னதானம் வழங்குகின்றனர்.


அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் வருஷாபிஷேக விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் விழா கமிட்டியாளர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

  • Share on

நாளை வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழா... இன்று எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடியில் வேலை தேடுபவர்களுக்கு தேடி வந்திருக்கும் வாய்ப்பு!

  • Share on