ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையினையொட்டி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்றது.
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதற்காக பாகம் வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு பயிற்சி முகாம் மாநிலம் முழுவதும் இருந்து வரும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்துவதற்கு திமுகவின் தலைவரும் முதல்வருமான மு. க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பயிற்சி முகாமானது நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய வாக்குசாவடி டிஜிட்டல் முவர்களுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடி தாளமுத்து நகர் சிலுவைபட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தலைமையில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை பாண்டியன் ஆகியோர் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

இதில், தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான சரவணக்குமார், தொகுதி பொறுப்பாளர் செந்தூர் மணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அதோணி தனுஷ் பாலன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பால்துரை, ஸ்டாலின் மற்றும் ரவி, பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




