தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வது வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் தாயார் B.தாயம்மாள் மறைவிற்கு, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வது வட்டச் செயலாளருமான திரு.திருச்சிற்றம்பலம் அவர்கள் தாயார் திருமதி.B.தாயம்மாள் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் திரு.திருச்சிற்றம்பலம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திருமதி தாயம்மாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




