• vilasalnews@gmail.com

தூத்துக்குடிக்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை : இந்து முன்னணி கோரிக்கை!

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற ஜூலை 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த திருக்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  இத்திருக்கோவிலில் வருகின்ற 7.7.2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 


அன்றைய தினம் தூத்துக்குடி பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் முன்கூட்டியே திட்டமிட்டு விபத்துகள் எதுவும் நடக்காமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆங்காங்கே தற்காலிக CCTV கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

  • Share on

தூத்துக்குடி : துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

  • Share on