• vilasalnews@gmail.com

கல்வியே பேராயுதம்... கைகொடுக்கும் தவெக அஜிதா ஆக்னல்!

  • Share on

தூத்துக்குடியில் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் கல்விச் செலவை தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் ஏற்றுக்கொண்டு கல்வி உபகரணங்களை வழங்கினார். 


தூத்துக்குடியில் மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரைச் சார்ந்த இரண்டு குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாமல் ஏழ்மை நிலையில் தவித்து வந்தனர். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அக்குழந்தைகளை நேரில் சந்தித்து, இரண்டு குழந்தைகளின் முழு கல்விச் சம்பந்தமான செலவுகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.


மேலும், அந்த குழந்தைகளுக்கு தேவையான பள்ளிச்சீருடைகள், பேக், நோட்புக் போன்ற கல்வி உபகரணங்கள் மற்றும் அவர்கள் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினார்.

  • Share on

தூத்துக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

தூத்துக்குடியில் மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த பைக்!

  • Share on